கோடை விடுமுறை: விமான கட்டணம் உயர்வு - சுற்றுலா செல்வோர் அவதி!

Chennai Flight
By Sumathi Mar 24, 2023 08:10 AM GMT
Report

விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் பயணிகள் அவதியுற்றுள்ளனர்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், பக்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

கோடை விடுமுறை: விமான கட்டணம் உயர்வு - சுற்றுலா செல்வோர் அவதி! | Flight Charge Heavy Hike Summer Holiday

தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஸ்ரீலங்கா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து சென்னை வர சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.

கட்டணம் உயர்வு

மேலும், சென்னையில் இருந்து அந்தமான் செல்ல ரூ. 8,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இருந்து நேரடியாக விமாச சேவை இல்லாத நாடுகளுக்கு மற்ற மாநிலங்கள் வழியாக செல்ல வேண்டியுள்ளது.

கோடை விடுமுறை: விமான கட்டணம் உயர்வு - சுற்றுலா செல்வோர் அவதி! | Flight Charge Heavy Hike Summer Holiday

இதனால் கூடுதலாக விமான கட்டணம் செலவிட வேண்டி உள்ளது. மேலும், மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது.