பிரிட்டனுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா

india airport flight britain asia
By Praveen Apr 21, 2021 11:26 AM GMT
Report

கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்தது ஏர் இந்தியா நிறுவனம்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா பரவல் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு பரவ விருமாபாத மற்ற நாடுகள் குறிப்பாக பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லும் விமானங்களும் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையானது,

வரும் 24ம்தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்.

மேலும்  விமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் மற்றும் தள்ளுபடி தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது.