மன உளைச்சலில் பிரபல சென்னை அணி வீரர் ... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயிற்சியாளர்

Chennai Super Kings TATA IPL IPL 2022 Ambati Rayudu
By Petchi Avudaiappan May 16, 2022 09:11 AM GMT
Report

ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக அம்பத்தி ராயுடு அறிவித்தது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு  நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14 ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பின் சிறிது நேரத்தில் அந்த  பதிவை நீக்கினார்.

மன உளைச்சலில் பிரபல சென்னை அணி வீரர் ... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயிற்சியாளர் | Fleming Talks About Ambathi Rayudu Condition

இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அம்பத்தி ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்ததால் அப்படி பதிவிட்டு நீக்கியதாக சென்னை அணி யின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறினார். மேலும் ராயுடு தொடர்ந்து அணியில் இடம் பெறுவார் அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் ராயுடுவின் நிலைமை குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார்.எனவே அணியில் இடம்பெற்று தொடர்ந்து விளையாடுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.