அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 5 வயது சிறுமியின உலக சாதனை
சென்னையை அடுத்த மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அருணா லக்ஷ்மி.
இவரது மகள் 5 வயதான சாந்தினி லக்ஷ்மி.
இவர் குழந்தைகள் தினமான கடந்த நவம்பர் 14-ந் தேதி அன்று ராக் ராப்பல்லிங் என்று கூறப்படும் இரண்டு கயிறுகள் கொண்டு செங்குத்தான மலையில் இருந்து கீழ் இறங்கும் சாகசம் மற்றும்
மலை ஏறும் சாகசம் செய்து இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.
155 அடி உயரம் கொண்ட மலையின் மேல் இருந்து 1 நிமிடம் 51 வினாடியில் கீழ் இறங்கி சாதனை புரிந்துள்ளார்.
அதேபோல் 101 அடி உயரம் கொண்ட மலையை 2 நிமிடம் 15 வினாடிகளில் ஏறி அசத்தியுள்ளார் இந்த சிறுமி.
இவரின் இந்த சாதனையை பாராட்டும் வகையில் கருணை அறக்கட்டளை சார்பாக சிறுமியின் பிறந்தநாள் அன்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.