கிரிக்கெட்டில் இருந்து விலகும் 5 இந்திய வீரர்கள் - அதிர்ச்சி தகவல்

ishant sharma INDvsENG amit mishra wriddhiman saha Hanuma Vihari
By Petchi Avudaiappan Aug 03, 2021 06:12 PM GMT
Report

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு 5 இந்திய வீரர்கள் தங்களது ஓய்வை அறிவிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நாளை தொடங்க உள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து விலகும் 5 இந்திய வீரர்கள் - அதிர்ச்சி தகவல் | Five Indian Players Retirement Announced Soon

இந்த தொடருக்குப் பிறகு மூத்த வீரர்கள் தங்கள் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் இவர்களது ஓய்வு முடிவு இருக்கும் என கருதப்படுகிறது.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் இஷாந்த் சர்மா, தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் நீண்ட காலமாக தவித்து வரும் ஹனுமா விஹாரி, இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் விக்கெட் கீப்பராக விர்திமான் சஹா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

கிரிக்கெட்டில் இருந்து விலகும் 5 இந்திய வீரர்கள் - அதிர்ச்சி தகவல் | Five Indian Players Retirement Announced Soon

மேலும் 2016ம் ஆண்டிற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, இந்திய அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் ஆகியோர் விரைவில் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.