இலங்கை தொடரின் மூலம் அறிமுகமாகும் ஐந்து இளம் இந்திய வீரர்கள்
ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கை அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதல் போட்டி ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி போன்ற பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் இந்த தொடரின் மூலம் 5 இந்திய வீரர்கள் அறிமுகம் ஆக உள்ளார்கள். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணியின் துவக்க வீரராக களமிறங்கி அசத்திய தேவ்தத் படிக்கல், கொல்கத்தா அணியில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி, ராஜஸ்தான் வீரர் சேட்டன் சகரியா, கொல்கத்தா அணியின் அதிரடி வீரரானா நித்திஷ் ராணா, சென்னை அணியில் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கிருஷ்ணப்ப கௌதம் ஆகியோர் தான்.
இவர்கள்இந்த தொடரில் அசத்தினால் மட்டுமே வரும் கால இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.