தென்காசியில் பொதுமக்களிடையே அதிகரிக்கும் எலி காய்ச்சல் : பீதியில் மக்கள்

By Irumporai Oct 18, 2022 02:44 AM GMT
Report

 தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருக்கும் கடையம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் ஆண்டுதோறும் பரவுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

 எலி காய்ச்சல் 

இந்நிலையில், பருவமழை துவங்கியிருக்கும் நிலையில் தற்போது கடையம் பகுதியில் எலி காய்ச்சல் பரவி வருகிறது. ஆசீர்வாதபுரம் பகுதியில் , ஜெபக்குமார்(வயது23), சுதன்(வயது16), ஸ்டீபன்(வயது36), ஜெனிஸ்(வயது15) ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தென்காசியில் பொதுமக்களிடையே அதிகரிக்கும் எலி காய்ச்சல் : பீதியில் மக்கள் | Five Had Rat Fever Rat Fever

இவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் இந்த நான்கு பேருக்கும் எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதே போல் வீராசமுத்திரபுரத்தில் ஏழாம் வகுப்பு மாணவி நூர்ஜகான் என்பவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

தென்காசியில் அதிகரிக்கும் காய்ச்சல்

இவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை அடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐந்து பேருக்கு எலிக்காய்ச்சல் இருக்கும் தகவல் தென்காசி மாவட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.