5 சிறுமிகளை அடைத்துவைத்து போதை பொருட்கள் கொடுத்து 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!
5 சிறுமிகளை அடைத்து வைத்து 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
புதுச்சேரி, கீழ் சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். கோர்க்காடு ஏரிக்கரையில் இவர் வாத்து பண்ணை நடத்தி வந்துள்ளார். இதனை கவனித்துக் கொள்வதற்காகவும், தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்திருந்திருக்கிறார்.
அதன் வரிசையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் கொத்தடிமைகளாக சிறுமிகளை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். இதனை அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை
அதில், 3 ஆயிரம் ரூபாயை பெற்றோரிடம் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து பண்ணையில் அடைத்து வைத்து கஞ்சா, மது போதை பொருட்களை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததை தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரின் மகன் ராஜ்குமார், உறவினர் பசுபதி , ஐயனார், சிறுவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், கன்னியப்பன் மனைவிக்கு ஒரு ஆயுள் தண்டனையும், காத்தவராயர் என்பவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.