கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படப்பை பகுதியைச் சேர்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கார்த்திக்.
இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவானது.
இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் போலீசார் கொலை,கொலை முயற்சி,ஆட்கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கரசங்கால் கலைஞர் தெருவைச் சேர்ந்த ரவுடி கோபி (42). மற்றும் குன்றத்தூரை சேர்ந்த விக்கி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பேரில் கோபி மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய இவர்களது கூட்டாளியான சிலரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை அருகே பதுங்கியிருந்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுதாகர்,
கீழ்படப்பை பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன், திவாகர், கரசங்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில், சுந்தர் உள்ளிட்ட 5 பேரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து கத்தி, வீச்சருவாள் இரும்புராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் மீதும் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.