சூடாகி வெடிக்கும் ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி - வாடிக்கையாளரை எச்சரித்த பிரபல நிறுவனம்

america smartwatches fitbitsmartwatches
By Petchi Avudaiappan Mar 05, 2022 04:24 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட் வாட்ச் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு  கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட் வாட்ச்கள் நம்மில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது என்றே சொல்லலாம். நேரத்திற்கு எழ, தண்ணீர் குடிக்க, நடக்கும் தூரத்தை அறிய, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு என அனைத்தையும் இதன்மூலம் நாம் அறியலாம். தொழில்நுட்ப சந்தையில் பல நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரித்து வரும் நிலையில் அமெரிக்காவைச் சேந்த ஃபிட்பிட் நிறுவனமும் உலகளவில் ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்துள்ளது. 

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்கள் அமெரிக்காவில் 10 லட்சமும், பிற நாடுகளில் 7 லட்சமும் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் ஃபிட்பிட்  நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி திடீரென சூடாகி வெடித்து சிதறுவதாக  அமெரிக்காவின் நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஃபிட்பிட் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அந்த ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 17 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்களையும் திரும்ப வாங்கியுள்ளது. மேலும் இதற்கான பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், எப்படி திரும்ப தங்களின் ஆர்டர்களை கொடுப்பது உள்ளிட்ட விவரத்தையும் . அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளனர்.