எகிறப்போகும் மீன் விலை; தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் - எவ்வளவு நாட்கள் தெரியுமா?
மீன்பிடித் தடைக்காலத்தினால் மீன்களின் விலை உயர்ந்து வருகிறது.
தடைக் காலம்
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக் காலம் நடைமுறையில் இருக்கும். கடலில் மீன் வளத்தை பெருக்கவும் கடல் வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தடைக் காலத்தை ஒட்டி சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 15 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
விலை உயர்வு
இந்நிலையில், மீபிடி தடைக்காலத்தில் அரசு சார்பில் மீனவர்களுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த காலத்தில் தான் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதனால் தற்போது மீன்களின் விலை அதிகரித்து வருகிறது.