மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

Fishing Increase Ban Relief Day
By Thahir Nov 01, 2021 01:46 PM GMT
Report

மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.6000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில்,தேர்தல் வாக்குறுதியின்படி,நடப்பாண்டு முதல் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு,ரூ.108 கோடி மதிப்பில் குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது