கடலில் மாயமான மீனவர்கள் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு
கடலில் மாயமான மீனவர்களை சக மீனவர்கள் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.
மாயமான மீனவர்கள் மீட்பு
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடித்ளத்தில் இருந்து மண்டபம் ஜெயராஜ் மகன் ஆல்வின் என்பவருக்கு சொந்தமான படங்களில் மீனவர்கள் முருகானந்தம், கண்ணன், கோவிந்தசாமி, ஜான் ஆகியோர் கடந்த 4ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அன்றைய தினம் மதியம் வரை கரை திரும்பவில்லை என்று தெரிகிறது.
இதனால் மாயமான மீனவர்களை சக மீனவர்கள் படகில் சென்று தேட தொடங்கினர். இருப்பினும் மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காற்றின் போக்கில் படகு நகர்ந்து இலங்கை கடல் பகுதியில் சென்று வைக்கப்பட்டது.
இந்த சூழலில் ராமநாதபுரம் மண்டபம் அருகே நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள் மூன்று நாட்களுக்குப் மீட்கப்பட்டுள்ளனர். நான்காம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர். சக மாணவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.