கடந்த இரு மாதங்களில் 9வது முறை கைது.. அத்துமீறும் இலங்கை கடற்படை- முதல்வர் அதிரடி!

Indian fishermen M K Stalin Tamil nadu
By Vidhya Senthil Mar 08, 2025 02:19 AM GMT
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  தமிழக மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர்,

கடந்த இரு மாதங்களில் 9வது முறை கைது.. அத்துமீறும் இலங்கை கடற்படை- முதல்வர் அதிரடி! | Fishermen Arrest Cm Stalins Letter Union Minister

2025ல், கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது 9வது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த கவலையுடன் சுட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.

மொழித் திணிப்பு விளைவு..உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் -ஸ்டாலின்!

மொழித் திணிப்பு விளைவு..உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் -ஸ்டாலின்!

மேலும் சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவுக்கூடிய ஒரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது

முக ஸ்டாலின்

வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர் எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை

கடந்த இரு மாதங்களில் 9வது முறை கைது.. அத்துமீறும் இலங்கை கடற்படை- முதல்வர் அதிரடி! | Fishermen Arrest Cm Stalins Letter Union Minister

கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்திடுமாறும் முதலமைச் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.