இலங்கை கடற்படையால் நடுக்கடலில் மீனவர் மரணம்: உண்மைகளை வெளிப்படுத்தும் குடந்தை அரசன்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து அக்டோபர் 18 ஆம் தேதி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ராஜ் கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30) அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகியோர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் 19 ஆம் தேதி கோட்டைப்பட்டினத்திலிருந்து 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் இடித்ததில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது.
இதில் கடலில் விழுந்து தத்தளித்த மீனவர்களில் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு மீட்டு சென்றனர்.ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.இந்த விவகாரத்தில் மறைந்துள்ள உண்மைகளை விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன் வெளிக்கொணருகிறார்.
அதன் வீடியோ இதோ: