மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபரீதம் - 5 மீனவர்கள் என்ன ஆனார்கள்?
காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு எதிர்பாராத விதமாக கோவளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னை காசிமேடு மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று காலை சார்லஸ், காந்தி, ஜானி, வேல்முருகன்ம் பொன்னுசாமி உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவளம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிந்தபோது திடீரென எழுந்த கடல் அலையால், படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த மின்வர்கள் படகு மற்றும் கேனை பிடித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த மற்ற மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.