மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி...!
தரையில் இருந்த மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலியாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது.
மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
அம்பத்தூரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கௌசல்யா. இவர்களுக்கு ஒன்றை வயதில் மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், குழந்தை வீட்டில் தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, தரையில் கீழே வைத்திருந்த மீன் தொட்டிக்குள் பந்து விழுந்துவிட்டது.
மீன் தொட்டிக்குள் விழுந்த பொருளை எடுக்க குழந்தை முயற்சி செய்த போது, தொட்டிக்குள் தலைக்குப்புற கவிழ்ந்து மீன் தொட்டி உள்ளே விழுந்துள்ளார். இதை கவனிக்காத கௌசல்யா வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்தார்.
10 நிமிடம் கழித்து கௌசல்யா உள்ளே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். மீன் தொட்டிக்குள் குழந்தை தலைகீழாக மூச்சற்றுக் கிடந்ததைப் பார்த்து, உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மீன் தொட்டிக்குள் ஒன்றரை வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் வரவழைத்துள்ளது.