மீனவரின் வாய்க்குள் நுழைந்து தொண்டையில் சிக்கிய மீன் - விநோத சம்பவம்!
தண்ணீரில் இருந்து துள்ளி வெளியே வந்த மீன் ஒன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் வாய்க்குள் குதித்து தண்டையில் சிக்கிக்கொண்டது.
தாய்லாந்து நாட்டின் பட்டாதாலுங் என்ற கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் கடந்த 22-ம் தேதியன்று ஆழ்கடலில் மீன்படித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறிய வகை மீன் கடல்நீரில் இருந்து வெளியே துள்ளி குதித்து மீனவரின் வாய்க்குள் நுழைந்து தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.
வலியால் துடித்த அவரை மற்ற மீனவர்கள் மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுமார் 30 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்து மீனவரின் தொண்டையில் சிக்கிக்கொண்டிருந்த 5 இன்ச் நீளமுள்ள மீனை வெளியே எடுத்தனர்.
மேலும் இது குறித்து பேசிய மருத்துவர்கள், இதுபோன்ற ஒரு நிகழ்வை இதுவரை பார்த்ததே இல்லை என்றும், தொண்டையில் நுழைந்த மீன், சுவாச குழாய் வழியே வெளியே தப்பிக்க முயற்சித்ததால் இடையில் சிக்கிக்கொண்டது என்றும் தெரிவித்தனர்.