உயிர் மீனை விழுங்கிய நபருக்கு நிகழ்ந்த விபரீதம்!
மீன் பிடிக்க சென்ற வாலிபர் பிடித்த மீனை வாயில் கவ்விக் கொண்டு அடுத்த மீனை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி அருகே மாங்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா.இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று மாலை குன்றக்குடி பெரிய கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர் கையில் கிடைத்த மீனை வாயில் கவ்விக்கொண்டு, மற்றொரு மீனை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாயில் கவ்விய மீன் தொண்டையில் இறங்கி சிக்கிக்கொண்டது.இதனால் இளையராஜா மூச்சு விட முடியாமல் திணறியதை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே இளையராஜா மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து குன்றக்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த இளைராஜாவின் உடல், உடற்கூறு ஆய்விற்க்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.