5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோலிக்கு வந்த சோதனை : சோகத்தில் ரசிகர்கள்

Virat Kohli
By Irumporai Jun 15, 2022 01:37 PM GMT
Report

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களிலிருந்து விராட் கோலி வெளியேறியுள்ளார். ஐசிசி இன்று சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையை வெளியிட்டது.

ஐந்தாம் இடத்தில் விராட் கோலி

அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 811 ரேட்டிங்-யுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 5 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை.

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோலிக்கு வந்த சோதனை : சோகத்தில் ரசிகர்கள் | First Time The Test That Came To Kohli

சமீப காலமாக கோலியின் ஃபாம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது மேலும் சோதனையாக அமைந்துள்ளது.

ரோஹித் சர்மா 791 ரேட்டிங்-யுடன் ஐந்தாவது இடத்தில உள்ளார். ஐசிசி-யின் ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 892 ரேட்டிங்-யுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார் .

இவரைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு வீரர் இமாம்-உல்-ஹக் 815 ரேட்டிங்-யுடன் இப்போது உலகின் இரண்டாவது ஒருநாள் பேட்டராக உள்ளார். இதனிடையே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலில், இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஜடேஜா மூன்றாம் இடத்தில்

இந்திய அணி 105 ரேட்டிங் உடன் 5-வது இடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்துள்ளார். 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் லபுசேன் உள்ளார்.

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் முதல் இடத்திலும் இந்திய அணியின் அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். 3-வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளார்.