‘’ மாதரே மாதரே ‘’ - முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் சேர்ப்பு
tamilnadu
mkstalin
femalesecurity
firsttimetamilnadu
By Irumporai
3 years ago
தமிழக வரலாற்றில் முதன் முறையாக முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல்முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணி சவால் நிறைந்த பணியாகும் , இந்த நிலையில் தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில்,மேலும் சில பெண் காவலர்களை சேர்க்க பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வரலாற்றில் முதன் முறையாக முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.