‘‘அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

keeladi threewaal கீழடி தமிழ்நாகரிகம்
By Irumporai Jul 21, 2021 01:09 PM GMT
Report

கீழடி அருகே அமைந்துள்ள அகரத்தில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் கொண்ட சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கைதான் உலகிலேயே தொன்மையானது என உரக்கச் சொல்லி, அடுத்தடுத்து ஆதாரங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது கீழடி.

அந்த வகையில்  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

‘‘அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு! | First Three Row Brick Wall Near Keeladi

கீழடியை தொடர்ந்து அகரத்தில் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

இது கீழடியில் கிடைத்த செங்கல் நீளம், அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் அகரத்தில் செங்கற்கள் சதுர வடிவில் உள்ளன. மூன்று வரிசையாக செங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து கட்டிடம் கட்டியுள்ளனர்.

பிடிமானத்திற்காக களிமண் பயன்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர்.

‘‘அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு! | First Three Row Brick Wall Near Keeladi

.அகரத்தில் இதுவரை  4 அடி ஆழத்திற்கு மட்டும் அகழாய்வு பணிகள் நடந்துள்ள நிலையில் தற்போது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சுவர் கிடைத்துள்ளது .

இதன் மூலம் பழந்தமிழர்களின் நாகரிக வாழ்க்கை தமிழர்களின் வரலாற்றை மேலும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

மேலும் அகழாய்வு செய்த பின்னர்தான் சுவரின் முழு வடிவமும் தெரியவரும் என அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்