சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் முதல் உரை
தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை தலைவராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
அவரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இறுதியாக முதலமைச்சர் விஜய் பேசுகையில், சட்டப்பேரவையில் அனைவரும் சமம், ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் சமமான மதிப்பளிக்கப்படும்.

ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் இந்த பேரவை செயல்படும், அவ்வாறு சிறப்புமிக்க இந்த பேரவையை வழிநடத்தும் பண்பை பெற்றவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறி குட்டி கதை ஒன்று எடுத்துக்காட்டாக பேசினார். அப்போது பேரவை தலைவர் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
மேலும் பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியாற்றும் ஆர்வத்தில் வந்தவர்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சட்டசபைக்கு உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
