சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி - பீதியில் உலக நாடுகள்

china omicronvirus
By Petchi Avudaiappan Dec 13, 2021 09:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சீனா
Report

சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன. 

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பல உலக நாடுகளுக்கு தொற்று பரவல் ஏற்பட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

ஆனால் கொரோனா தொற்று டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது. கடந்த நவம்பர் 27ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த பாதிப்பு பின்பு பல உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டில் இருந்து வடக்கு சீனாவின் டியான்ஜின் பகுதிக்கு வந்த நபர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.