தமிழகத்தில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்
india
election
tamilnadu
By Jon
தமிழகம்- புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, நாளை முதல் 19 ம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20ம் தேதி நடைபெறும்.
மனுக்களைத் திரும்பப் பெற 22ம் தேதி கடைசி நாளாகும்.
அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.