என்னை கொன்றுவிடுங்கள், நான் காத்திருக்கிறேன் - ஆப்கானின் முதல் பெண் மேயர் ஆவேசம்!
என்னை கொன்றுவிடுங்கள், நான் காத்திருக்கிறேன் என ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் ஆவேசமாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் தான் ஜரீபா கபாரி.
இவர் 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேயராகப் பதவி ஏற்றார்.

இவர்தான் அந்நாட்டிலேயே இளம்வயதில் மேயர் பதவி ஏற்றவரும்கூட. ஆப்கானில் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றித் தன்வசம் ஆக்கிகொண்டனர்.
இதனிடையே ஜரீபா கபாரி நான் தாலிபான் ராணுவதிற்காக காத்திருப்பதாகவும் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் கொல்லப்போவதால், அதற்கு தயாராகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தன் கணவருடனும் குடும்பத்தினருடனும் அமர்ந்திருப்பதாகவும் தன்னை போன்ற மக்களையும் குடும்பத்தினரையும் தாலிபான்கள் கொல்லப்போகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.