பன்றியின் இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை 57 வயதான் நபருக்குப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்த அமெரிக்காவை சேர்ந்த உலகின் முதல் நபர் இரண்டு மாதங்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட்டுக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்த அவர் நேற்று முந்தினம் உயிரிழந்தார்.
இந்நிலையில், பல நாட்களுக்கு முன்பே பென்னட்டின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக பால்டிமோரில் உள்ள அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டேவிட் பென்னட் கடந்த ஜனவரி 7-ம் தேதி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் தொலைக்காட்சி பார்த்தும்,
மேலும் அவரது செல்லப்பிராணியான லக்கி என்ற நாயை பார்க்க வீட்டிற்குச் செல்ல விரும்பியதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "டேவிட் பென்னட் ஒரு துணிச்சலான மற்றும் உன்னதமான மனிதர் என்பதை இறுதிவரை போராடி நிரூபித்தார்" என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த நிபுணர் பார்ட்லி கிரிஃபித் தெரிவித்தார்.
இந்நிலையில் பென்னட்டின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.