‘’அண்ணாத்த ஆட்டம் ஆரம்பம்": நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்

Nayanthara rajinikanth AnnaattheFirstLook AnnaattheMotionPoster directorsiva
By Irumporai Sep 09, 2021 07:52 AM GMT
Report

தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் படமாக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை அண்ணாத்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘வா தலைவா வா’ என்று உற்சாகமுடன் பகிர்ந்துள்ளனர்.