நேரு சொன்ன அந்த முதல் வார்த்தை.. சோகத்தில் காந்தி .. 1947 ஆகஸ்ட் 15 இந்தியா எப்படி இருந்தது?
நமது சுதந்திரம் என்பது, பல ஆயிரக்கணக்கான தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்ல கூடிய சிறப்பாகும்.
இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமானவர்களாக இருவர் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்கள் ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருவருமே சமகாலத்து தலைவர்கள் இருவருமே மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள்.

இருவரின் வழிமுறைகள் வேறு வேறாக இருந்தபோதும், இலக்கு என்னவோ ஒன்றாகவே இருந்தது அதே சமயம்காந்திஜியும் நேதாஜியும் ஒன்றாக செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது.
அதேசமயம், ஆங்கிலேயர்களை நாட்டினை விட்டு வெளியேற்ற நமது அதிகாரத்தை பயன்படுத்தவேண்டும் என்பதில் நேதாஜி காந்திஜியைவிட ஒருபடி முன்னே இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை சரி அது ஒரு புறம் இருக்கட்டும் 1947, ஆகஸ்ட் 15.... சுதந்திரம் பெற்ற தினத்தன்று, நம் நாட்டு மக்களின் உணர்வு அன்றைய நாள் எப்படி இருந்தது தெரியுமா?

நம் தலைநகரம் எப்படி இருந்தது இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற அறிவிப்பு வெளியானது, அன்று ஒருநாள் நாடே மகிழ்ச்சியில் மூழ்கியது தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை ஆனாலும் தலைநகரில் நம் மக்களின் கொண்டாட்ட முழக்கம் உலகமெங்கும் ஒளித்தது.
ஆகஸ்டு 15 சுதந்திரம் தரலாம் என அறிவிக்கப்பட்டவுடனேயே ஒரு சிலர் நேரம் சரியில்லை என கருத்து கூற நள்ளிரவு 12 மணிக்கு நேரம் குறிக்க கடிகார மணி அதிர ஓங்கி ஒலித்தது.உடனே ஒரு பெரிய மாடம் ஒன்றிலிருந்து ஒருவர் ஓடி வந்து சங்கநாதத்தை எடுத்து ஊதினார்.இப்படி ஒரு சங்கநாதத்தை ஊதுவதற்காகவே சிறப்பான கலைஞர்கள் அப்போது இருந்தார்களாம்.
சங்கநாதம் நகரமெங்கும் ஒலிக்க புதிய தேசம், விடியல் தேசம், சுதந்திர தேசம் பிறந்துவிட்டதென சத்தமாக அறிவிக்கப்பட்டதுஅப்போது அரங்கம் வெளியே கூடியிருந்த மக்கள் ஒன்றுகூடி, கரங்களை தட்ட ஆரம்பித்தனர். நீண்ட நேரத்துக்கு கைகளை தட்டி கொண்டே இருந்திருக்கிறார்கள்.
பிறகு எல்லாரும் சேர்ந்து வந்தே மாதரம் என்று ஒன்றாக முழக்கமிட்டுள்ளனர் முதல் செயலாக, நேரு தலைமையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நம் தேசத்தை காப்போம், இந்திய மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என்று நேரு சொல்ல, அதை கேட்டு கூடியிருந்த மக்களும் அதையே திருப்பி திருப்பி சொல்லி உள்ளனர் .

பின்னர் தன் முதல் சுதந்திர உரையை துவங்கிய நேரு ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் நீண்ட நெடுங்காலத்துக்கு முன் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழித்து விட்டது என்றார்.
கருத்து வேற்றுமைகள் நேதாஜிக்கும் சரி, நேருவுக்கும் சரி, ஆயிரம் முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள் இருந்ததை மறுக்க முடியாது.. ஆளுக்கு ஒருபக்கம் நின்று வெவ்வெறு நிலைகளில் நின்று போராட்டத்தை கையில் எடுத்தவர்கள்தான் என்றாலும், நேதாஜியின் அந்த ஒற்றை சொல் முழக்கம் பாரதத்திற்கு புத்தொளியும், புத்துயிரும் ஊட்டியது.
பின்னர் பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியை எடுத்து கொடுக்க, இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்கு பதில் சுதந்திர இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். "இந்தியா விடுதலை அடைகிறது" என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார்அதன் பிறகு ராஜேந்திர பிரசாத்தும் நேருவும் முறைப்படி மவுண்ட் பேட்டனை நள்ளிரவு சந்தித்து இலாக்கா விபரங்களை முறைப்படி அளித்தனர் .
அதே சமயம் சுதந்திரத்துக்கு இருவாரங்கள் முன்பு காந்தி டெல்லியை விட்டு வெளியேறினார். காஷ்மீரில் நான்கு நாட்கள் இருந்தபிறகு கல்கத்தாவுக்கு ரயில் ஏறினார்.13ம் தேதி மதியம் முஸ்லிம்கள் அதிகம் இருந்த பெலியகட்டாவில் இருந்து கலவரத்தை அடக்க முயன்றார்.
ஆகஸ்ட் 14ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஹைதாரி மாளிகையிலிருந்து பிரார்த்தனை கூடம் நோக்கி நடந்தார். கிழக்கு பாகிஸ்தானின் முதன்மை அமைச்சராகவிருந்த காஜா மொகைதீன் பிற்பகலில் டாக்கா நோக்கி சென்றார். எல்லைகள் வரையறுக்கப்படாததாலும், கலவரங்களாலும் நிறைந்திருந்தன வங்கம். தீவிரமாய் உருவாகவிருந்த கலவரத்தை தீரத்துடன் அடக்கினார் காந்தி.

பெரிய சந்தோசமின்றி இருந்தார். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் செய்திகள் அவரை கலக்கமுறச் செய்தன. ஆகஸ்ட் 15ம் தேதி 24 மணி நேர உண்ணாவிரதம் இருந்தார்.
கல்கத்தா,பீகார் என வன்முறை பரவிக் கொண்டே இருந்தன. அங்கு அமைதி ஏற்பட ஏழு வாரத்தில் 116 மைல் சுற்றுப்பயணம் செய்தார். இறக்கும் வரை பிரிவினை அவரின் நெஞ்சில் ஒரு முள்ளாகவே இருந்தன.
1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14-15 ம் தேதி இந்திய சுதந்திரம் இனக்கலவர வலியோடு பிறந்தது. பொருளாதார, சமூக நிலை மோசமாய் இருந்தது. இருப்பினும் சுதந்திரம் கிடைத்த ஆனந்தம் அதையெல்லாம் ஓரளவு மறைப்பதாய் இருந்தது.
சுதந்திரம் கிடைத்தவுடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்ன வரிகள் இதுதான் இனிமேல் நாம் ஆங்கிலேயர் மீது பழி போட முடியாது, முன்னோர்களை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் நடைபெற இருக்கும் அனைத்திற்கும் நாமே முழுமுதற் காரணமும் பொறுப்பும் என்றார்ஆகவே சுதந்திர இந்தியா என்கிற இந்த மாளிகையில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒற்றுமையாக வாழ உரிமையுள்ளது அதனை பின்பற்ற வேண்டியது நமது கடமை
ஆதாரங்கள் : வரலாற்று சுவடுகள் , விகடன்