Tuesday, Jul 8, 2025

தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை; அதுவும் அந்த காலத்திலேயே - யார் தெரியுமா?

Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath a year ago
Report

நடிகை கே.ஆர்.விஜயா பற்றி யாரும் அறியாத செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே.ஆர்.விஜயா

தமிழ் சினிமாவில் 1960, 70-களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை கே.ஆர்.விஜயா. தனது அசாத்திய நடிப்பால் தமிழ் மட்டுமல்லால் தெலுங்கு, மலையாளம், கனடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை; அதுவும் அந்த காலத்திலேயே - யார் தெரியுமா? | First Heroine To Buy Private Jet For Her Own Use

மேலும், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார். புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆருக்கு நிகராக சம்பளம் வாங்கிய நடிகை கே.ஆர்.விஜயா தான்.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

தனி விமானம் 

இவர் நடிப்பில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 10 படங்களாவது திரையரங்குகளில் வெளியாகுமாம். இந்நிலையில் கே.ஆர்.விஜயா பற்றி யாரும் அறியாத செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை; அதுவும் அந்த காலத்திலேயே - யார் தெரியுமா? | First Heroine To Buy Private Jet For Her Own Use

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென்று முதன் முதலில் தனி விமானம் வாங்கிய நடிகை கே.ஆர்.விஜயா தானாம். மேலும், இவரின் சகோதரி கே.ஆர். வத்சலா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "நானும் என் அக்காவும் சாப்பாட்டை பற்றியும் கோயிலுக்கு செல்வதை பற்றியும்தான் பேசுவோம்.

அக்கா 50க்கும் மேற்பட்ட சாம்பார்களை வைப்பார்கள். என் அக்கா ஷூட்டிங் போகுறதுக்காகவே விமானம் வைத்திருந்தார். 4 கப்பல்களையும் வைத்திருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.