இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்டாவர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற்றது

tamilnadu krishnagiri reception metaverse marriage first ever ossur
By Swetha Subash Feb 07, 2022 07:10 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்துடன் மெய்நிகர் (virtual reality) திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்தியாவில் முதன்முறையாக மெட்டவர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த சிவலிங்கபுரம் கிராமத்தில்,

சென்னை ஐஐடியில் பணியாற்றி வரும் மென் பொறியாளர் தினேஷ் மற்றும் ஜனகநந்தினி இருவருக்கும் 6-ம் தேதி காலை திருமணம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலை 6.30 அளவில் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மறைந்த ஜனகநந்தினியின் தந்தை திருமண வரவேற்பிற்கு பங்கேற்றவர்களை வரவேற்கும் வகையில் வடிவமைக்கட்டிருந்தது.

இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்டாவர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற்றது | First Ever Metaverse Reception In Krishnagiri

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் இதன் வாயிலாக உள்ளே சென்று தங்களுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்தனர்.

நெட்வொர்க் இல்லாத மலை கிராமங்களில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்டாவர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற்றது | First Ever Metaverse Reception In Krishnagiri

இந்த நிகழ்ச்சி குறித்து மணமக்கள் தெரிவிக்கையில், இந்தியாவில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

கிராமப்புறங்களில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்துவது பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும் மனைவியின் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக தெரிவித்தனர்.