Wednesday, Mar 12, 2025

திராவிடத்தை அழிக்கணும்.. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் : ஹெச்.ராஜா

DMK BJP H Raja
By Irumporai 2 years ago
Report

தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாமி தரிசனம் செய்தார்.

திராவிடத்தை அழிக்கணும்

அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா ,பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி யாத்திரையினை மேற்கொள்ள உள்ளார்,தமிழ்தொலைந்து விட்டது என்று கூறிய ஹெச்.ராஜா திராவிடத்தை அழித்தால் தான் தமிழை காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

திராவிடத்தை அழிக்கணும்.. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் : ஹெச்.ராஜா | First Enemy Of Tamil Is Dravidian H Raja

தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தல் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கை வந்து விட்டது.

திராவிடத்தை அழிக்கணும்.. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் : ஹெச்.ராஜா | First Enemy Of Tamil Is Dravidian H Raja

தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள். இதனால் மக்கள் திமுக பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள் எனக் கூறினார்.