பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் பிரபலம் - யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5ல் இருந்து முதல் போட்டியாளராக நாடியா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து கடந்த வாரம் வெளியேறினார்.

இதனிடையே இதில் பங்கேற்றுள்ள மலேசியாவை சேர்ந்த மாடல் மற்றும் டப்ஸ்மாஷ் பிரபலம் நாடியா சேங் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த வாரம் இமான் அண்ணாச்சி கதைக்கு டிஸ்லைக் கொடுத்த நிலையில் அதற்கு காரணம் கேட்டபோது, காரணம் எல்லாம் சொல்ல முடியாது என திமிராக பதில் கூறினார். அதனால் அவரை அப்போது இருந்தே நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு நாடியா பிக் பாஸ் வீட்டில் அவரது கதையை சொன்னார். தான் 14 வயதில் இருந்தே வேலை தான் செய்துவந்தேன், அம்மா அதிகம் ஸ்ட்ரிக்ட், போலீசிடம் அடி வாங்க வைத்தார் என நாடியா குற்றம்சாட்டி இருந்தார். அதன் பின் கணவர் தான் வந்து என்னை அம்மாவிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் எனவும் நாடியா கூறி இருந்தார், அவர் சொன்ன கதை பொய்யானது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்