வேலூரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வேலூர் மாநகருக்கு உட்பட்ட சேன்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கெஸ்ட்ரா நடத்தி வரும் முருகானந்தம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதிக்கையில் இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது இடது கண்ணை அறுவை சிகிச்சை மூவம் அகற்றிய நிலையில் திடீரென நேற்று (26.05.2021) உயிரிழந்துள்ளார்.
கருப்பு பூச்சை நோயினால் பாதிக்கப்பட்டு வேலூர் மாவட்டத்தில் நிகழும் முதல் உயிரிழப்பு இதுவாகும். எற்க்கனவே வேலூரை சேர்ந்த 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலத்தாரும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 40 பேர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்.