இந்தியாவின் முதல் AI கிளினிக்; ஹை-டெக் சிகிச்சை - எங்கு தெரியுமா?

Uttar Pradesh Artificial Intelligence
By Sumathi Jan 06, 2026 02:37 PM GMT
Report

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

AI கிளினிக்

உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் (GIMS) இந்த ஏ.ஐ. கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் AI கிளினிக்; ஹை-டெக் சிகிச்சை - எங்கு தெரியுமா? | First Ai Clinic Of India Gims Greater Noida

மத்திய அரசின் சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குநர் ஜெனரலால் இணையவழியில் இந்த AI கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டது. ஜிம்ஸ் மருத்துவமனையின் 'மருத்துவ கண்டுபிடிப்பு மையத்தின்' கீழ் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிம்ஸ் இயக்குநர் பிரிகேடியர் டாக்டர். ராகேஷ் குமார் குப்தா கூறுகையில், "இந்த முயற்சி மருத்துவ ஸ்டார்ட்-அப்களுக்குப் புதிய கதவுகளைத் திறக்கும். இன்றைய காலக்கட்டத்தில் இத்தகைய கண்டுபிடிப்புகள் நோயாளிகளுக்கு நேரடியாகக் கிடைப்பது மிகவும் அவசியம்" என்றார்.

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி - 200 பேர் பாதிப்பு

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி - 200 பேர் பாதிப்பு

ஹை-டெக் சிகிச்சை

இந்தத் தொடக்க விழாவில் இந்தியா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் முதல் AI கிளினிக்; ஹை-டெக் சிகிச்சை - எங்கு தெரியுமா? | First Ai Clinic Of India Gims Greater Noida

மேலும், இந்த AI கிளினிக் ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி லக்னோ ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சையைப் பெற முடியும். ஜனவரி 2-ம் தேதி இணையவழியில் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் நேரடித் திறப்பு விழா இன்று நடைபெற்றது.