இலங்கையில் போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு..!
இலங்கையின் கேகாலை மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டடில் ஒருவர் உயிரிழந்தார்.
எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக 15 மணி நேரத்திற்கும் மேலாக ரம்பூக்கன் பகுதியில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டம் தீவிரமடைந்த நிலையில் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆனால் கூட்டம் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் ஆட்டோ ஒன்றை தீயிட்டு கொளுத்தினர்.
இதனையடுத்து போலீசார் துப்பாகிச் சூடு நடத்தியதாக காவல்துறை செய்தி தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
வன்முறையை அடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது.