ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு - 4 பயணிகள் உயிரிழப்பு..!
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்பிஎஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) ஏஎஸ்ஐ உள்பட நான்கு பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் இன்று காலை மகாராஷ்டிரா மாநிலம், மும்பைசென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது, பி 5 ரயில் பெட் டியில் இருந்து திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறித்துடித்தனர்.
4 பேர் உயிரிழப்பு
இந்த துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) ஏஎஸ்ஐ உள்பட நான்கு பயணிகள் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். அவர்களை ஆர்பிஎஃப் படைவீரர் சேத்தன் என்பவர் சுட்டதாக கூறப்படுகிறது.
அவரை துப்பாக்கியுடன் ரயில்வே காவல் துறை (ஜிஆர்பி) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட பயணிகள் யார், எதற்காக சேத்தன் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.