போலீஸ் எஸ்.ஐ நடத்திய துப்பாக்கிச் சூடு - அமைச்சர் பரிதாப பலி
ஒடிசாவில் காவல் துறை உதவி ஆய்வாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமைச்சர் பரிதாபதமாக உயிரிழந்தார்.
அமைச்சர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் நபகிஷோர் தாஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் மக்களை சந்திப்பதற்காக காரில் இருந்து கீழே இறங்கியபோது, அமைச்சர் மீது காவல்துறை துணை உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் குண்டு பாய்ந்ததில் அமைச்சர் படுகாயம் அடைந்நதார்.
இதையடுத்து அவர் ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் புவனேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட துணை உதவி ஆய்வாளரை உள்ளூர் மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அவரை கைது செய்யத போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
அமைச்சர் உயிரிழப்பு குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது துப்பாக்கிக் குண்டு அவரை மார்பை துளைத்து, பின்னர் உடலில் இருந்து வெளியேறியது கண்டறியப்பட்டது.
அவரது இதயம் , நுரையீரல் காயமடைந்திருந்தன. உடலில் ரத்தப்போக்கும் அதிகமிருந்தது. அவரது இதய செயல்பாட்டை மேம்படுத்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
அவசரகால தீவிர சிகிச்சை பிரிவிலர் சிறப்பான சிகிச்சைகள் அளித்தும் அவரை காப்பாற்ற இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.