பட்டாசு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
பொதுமக்கள் பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை.
பட்டாசுகளால் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவசர சிகிச்சை மையங்களில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்பாராத விபத்துகள் தொடர்பான தகவல்களை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும்போது, எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது. குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.