பட்டாசு வெடித்து விபத்து; 4 உயிர்கள் பலியான சோகம் - முதலமைச்சர் நிதியுதவி

M K Stalin Government of Tamil Nadu Death
By Thahir Dec 31, 2022 01:39 PM GMT
Report

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு 

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிவிப்பில், நாமக்கல் மாவட்டம், மோகனுார் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (வயது 35), பிரியா (வயது 28), செல்வி (வயது 55) மற்றும் பெரியக்காள் (வயது 73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

Fireworks accident; Chief Minister Funding

இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.