கொட்டும் கனமழை: பிறந்து 4 நாட்களேயான குழந்தை- தாயை மீட்ட வீரர்கள்
சென்னை புளியந்தோப்பு அரசு தாய்- சேய் நல மருத்துவமனையில் வெள்ளத்தில் தத்தளித்த பிறந்து 4 நாட்களேயான குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தியாவசிய உதவிகள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர், இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள அரசு தாய்- சேய் நல மருத்துவமனை சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது.
இதனால் பிறந்த 4 நாட்களான 2 குழந்தைகளின் பெற்றோர்கள் வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
இதையறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து சென்று குழந்தை மற்றும் தாயை பத்திரமாக மீட்டனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.