வழுக்கைத்தலை கேலி; பெண்களின் மார்பகத்தை கேலி செய்வதற்கு சமம் - நீதிமன்றம்
வழுக்கை தலையை காரணம் காட்டி ஊழியரை பணிநீக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
வழுக்கை தலை
பிரிட்டன், லீட்ஸை தலைமையிடமாகக் கொண்டு டேங்கோ நெட்வொர்க் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு நிறுவன முதலாளி பிலிப் ஹெல்கேத், சேல்ஸ் டைரக்டரான மார்க் ஜோன்ஸ் என்பவரை வழுக்கையாக இருப்பதைக் காரணம் காட்டி பணிநீக்கம் செய்துள்ளார். ஆனால், முதலாளியே 50 வயதை கடந்த வழுக்கை தலையுடன் கூடியவர் தான்.

இதனால், தனது டீம் தன்னை போல முதிய தோற்றத்தில் இல்லாமல் இளமை துள்ளலுடன் இருக்க வேண்டும் என காரணம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஊழியர் தன்னை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்றே இதுபோன்ற அர்த்தமில்லா காரணம் காட்டியுள்ளார் என நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார்.
பணிநீக்கம்
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜோன்ஸை பணியை விட்டு நீக்கியதில் எந்த அடிப்படை தகுதியும் இல்லை எனக் கூறி ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஊழியரின் வழுக்கை தலையை குறிப்பிட்டு அவமதிப்பது, பெண்களின் மார்பகத்தின் அளவை குறிப்பிடுவதற்கு சமம். இதுவும் பாலியல் தொல்லை என்று கருதப்படும் எனத் தெரிவித்துள்ளது.