பட்டாசு ஆலை வெடி விபத்து, 12 பேர் பலி - மன்னிப்பு கேட்கும் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்காளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு மம்தா மன்னிப்பு கேட்டு பேசியுள்ளார்.
விபத்து
மேற்கு வங்காளத்தின் பர்பா மேதினிபூர் மாவட்டத்தின், எக்ரா பகுதிக்கு அருகே உள்ள காடிக்குல் கிராமத்தில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது.

இந்த ஆலையில் கடந்த 16-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் பலர் காயமடைந்துள்ளனர், இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி தொகை மற்றும் அரசாங்கத்தில் வேலையும் தருவதாக அறிவித்துள்ளார்.
முதல்வர்
இந்நிலையில், அம்மாநில முதல்வர் பேசுகையில், "சட்ட விரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு நான் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய உளவுத்துறை சரியாக செயல்பட்டிருந்தால், சரியான உளவுத்தகவல்களை மாநில அரசு பெற்றிருந்தால் இந்த வெடிவிபத்தை தடுத்திருக்கலாம்" என்று கூறினார்.
மேலும், இதுபோல சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் நடத்துவது தெரியவந்தால் உடனடியாக போலீசிடம் புகார் அளிக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, இந்த வழக்கை சி.ஐ.டி அதிகாரிகளே விசாரிக்குமாறு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.