இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள் : 45சிகரெட் பிடித்த சென்னைவாசிகள் ? வெளியான அதிர்ச்சி தகவல்

tamilnadu increased firecrackers airpollution
By Irumporai Nov 04, 2021 11:14 PM GMT
Report

சென்னையில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிக மக்களால் இரவு நேர வெடிகள் வெடிக்கப்படுகின்றன.

இதனால் தற்போது சென்னை நகரின் காற்று மாசுபாட்டின் அளவு மிதமான நிலையில் "மோசம்" என்கிற நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவு 100 முதல் 150 என்கிற அளவில் உள்ளது, இது மோசமான அளவாகும்


இந்த நிலையில், பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட தகவலின் படி சென்னை மூச்சு திணறி தடுமாறுகிறது,

கடந்த சில மணி நேரத்தில் 45சிகரெட் பிடித்த சென்னைவாசிகள். பட்டாசு நச்சு புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுகளுக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளது.

Air Quality Index -AQI 50 இருந்தால் நல்ல காற்று,100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சென்னையின் பல்வேறு இடங்களில் AQI ஆபாயகரமான அளவான 500+ தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 AQI ஆகவும், மணலியில் 578 AQI ஆகவும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 20 மடங்கு அதிகம்.

அடுத்த சில நாட்களில் மருத்துவமனைக்கு நுரையீரல் நோயால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை நினைத்தாலே அச்சமாகவுள்ளது.

இந்த அளவுள்ள காற்றுமாசுள்ள பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்திருப்பார்களோ்அவ்வளவு நச்சை சுவாசித்துள்ளார்கள்.

சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக சாமானியர்கள் தான் தற்பொழுது அவதி பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மனித ஆயுளை குறைக்கும் நச்சு புகை வெளியிடும் இந்த பட்டாசுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.