பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு..!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
சிவகாசி ஆனையூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன்(35), சுந்தர்ராஜ்(27)அய்யம்மாள் (70) ஆகிய 3 பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணத்தை அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” பட்டாசு அலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த உயிரிழந்தவர்களின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயி அவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”: என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/5lYXhfUr0P
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 18, 2023