தீ பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்; விபத்தா - சதியா? உச்சகட்ட பதற்றம்
மீண்டும் ஒரு ரயில் பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
கேரளா, ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிக்யூட்டிவ் ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. திடீரென அதன் பெட்டிகளில் ஒன்றில் புகை வெளியேறியுள்ளது.

சிறிது நேரத்தில் பெட்டி தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
பதற்றம்
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்ட நிலையில் ரயில் பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. ரயில் பெட்டிகளுடன் எஞ்சின் இணைக்கப்படாமல் இருந்ததால் பெட்டிகளில் மின் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து, மர்ம நபர்களின் சதிசெயலா என்ற நோக்கில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.