சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

family recover tamilnadu
By Jon Feb 13, 2021 05:05 PM GMT
Report

விருதுநகரின் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வழக்கம்போல் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பட்டாசு ஆலை விபத்து வருத்தம் அளிக்கிறது. படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.