சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து – 5 பேர் படுகாயத்துடன் மீட்பு - அதிர்ச்சியில் மக்கள்
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை, மஞ்சள்சோலை ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் வெடி விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, ஆலையில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் தீயணைப்பு போலீசார் மீட்கப்பட்டனர். இவர்கள் 5 பேரும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலையில் மேலும் சிலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே, ஜனவரி 1ம் தேதி சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.