LIC கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - அண்ணா சாலையில் கூடிய கூட்டம்
சென்னை பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
எல்.ஐ.சி (LIC) கட்டிடத்தில் தீ விபத்து
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருவது எல்.ஐ.சி (LIC) இருந்து வருகிறது. பல பெருமைகளை கொண்ட இந்த கட்டிடத்தில் 14 மாடிகள் உள்ளது மொட்டை மாடியில் உள்ள 15 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட எல்.ஐ.சி (LIC)என்ற விளம்பர பெயர் பலகை ஒன்று உள்ளது.
நேற்று மாலை 5.50 மணி அளவில் பெயர் பலகையில் இருந்து திடீரென புகை கிளம்பி உள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி பாலாஜி என்பவர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் பெயர் பலகையில் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்துள்ளது. இதையடுத்து அதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு தீ பற்றி எரிவதை பார்த்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஸ்கை லிப்ட் வாகனத்தின் வசதியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் தீயை முற்றிலுமாக அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.