ராஜஸ்தான் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Rajasthan oilfactoryfireaccident
By Petchi Avudaiappan Jan 30, 2022 06:08 PM GMT
Report

ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று உள்ளது.  இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த இடமே புகை மண்டலமாக மாறியது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், , தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்  ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.